எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், போனிகபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இந்தியா முதல் இங்கிலாந்து வரை ரசிகர்கள் தெறிக்க விட்டனர். இப்படத்தின் பஸ்ட் லுக் உடனுக்குடன், தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டரையும் இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் தியேட்டர் ரிலீஸ், சேட்டிலைட் உரிமம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் 200 கோடி முதல் 225 கோடி வரை வியாபாரம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகாமல் டைட்டில் மூலம் ஒரு தமிழ் படத்தில் எத்தனை கோடி வியாபாரமாவது தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகின்றது.