Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி… சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 225 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் அறிவித்துள்ளது. 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் தடுப்புமருந்து முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ” கோவிஷீல்டு ”  என்ற கொரோனா தடுப்பூசியை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்தப் பரிசோதனைகளுக்கு பிறகு வரும் அக்டோபர் மாதத்தில் கோவிஷீல்டு தயாரிப்பு பணி துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2021 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் இந்தியாவில் வசித்து வரும் 10 கோடி பேருக்கு இத்தகைய தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் கணக்கிடப்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு இந்த தடுப்பூசியின் விலையானது 3 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 225 ரூபாய் என்ற கணக்கில் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

Categories

Tech |