Categories
தேசிய செய்திகள்

23ஆவது நாளாக…! ”கடும் குளிரில் போராட்டம்”… 37வயது விவசாயி உயிரிழப்பு… பெரும் சோகம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளில் மேலும் ஒருவர் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 23 நாளாக போராடி வருகின்றனர். டெல்லியில் அதிகாலை நேரத்தில் நான்கு டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சரிவதால் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பஞ்சாப்பை சேர்ந்த 37 வயது விவசாயி ஒருவர் கடும் குளிரால் உயிரிழந்தார். சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ள நிலையில், வேளாண்  சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியுடன் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |