Categories
தேசிய செய்திகள்

23வயது பெண் தற்கொலை….! இப்படியே விடக்கூடாது…! உடனே கண்டுபிடிங்க… பரபரப்பாக களமிறங்கிய பிஜேபி …!!

மூத்த பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் புனேவில் நடந்த 23 வயதான இளம் பெண் தற்கொலை வழக்கை காவல்துறையினர் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் பூனேவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளாததாக கூறப்படுகிறது .மேலும் அமைச்சர் ஒருவருடன் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது .

மூத்த பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சம்பவம் குறித்து கூறுகையில், காவல்துறையினர் இளம்பெண் தற்கொலை வழக்கின் விசாரணை தீவிரமாக இல்லை என்றும், 12 ஆடியோ கிளிப்புகள் இவ்வழக்கு சம்பந்தமாக கிடைத்துள்ளது. மேலும் அந்த கிளிப்பில் உள்ள குரல் அனைவராலும் எளிதில் கண்டுபுடிக்க முடிந்த குரலாக உள்ளதாக கூறுகிறார்.

அந்த குரல் யாருடையது என்று போலீசாரால் மறைக்கப்பட்டுள்ளது. அதனை காவல் துறையினர் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வழக்கு குறித்து தானாகவே முன்வந்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |