Categories
தேசிய செய்திகள்

23 கோடி மக்கள் வறுமைக்கு…. இது தான் காரணம்…. ப.சிதம்பரம் குற்றசாட்டு…!!!

இந்தியாவில் கொரோன இரண்டாவது அதிகமாக பரவி வருவதை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டதன் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் வேலையில்லாமல் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுதற்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் நடுத்தர மக்களுக்கும் அவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Categories

Tech |