சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தற்போது பொதுக்குழு அரங்கத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்றனர். அரங்கில் மாறி மாறி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் “வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும்” என்றும் வேண்டாம் வேண்டாம் இரட்டைத்தலைமை வேண்டாம் என்றும் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்த பிறகே தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று எடப்பாடி தரப்பு போர்க்கொடி தூக்கியதால், அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேறுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்றும் ஒற்றை தலைமை குறித்து மட்டுமே விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.