Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

23 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. ஒரே மாதத்தில் இவ்வளவா….? இதை செய்தால் அபராதம் தான்….!!

கோவையில் 23 பேர் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் பேசுகையில், கோவையில் 1 மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அருணா பேசியதாவது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசு உற்பத்திக்கு காரணமானவர்களை கண்டறிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கம்பெனிகளுக்கு அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரையும் வீடுகளுக்கு 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதனால் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |