கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் நார்வே நாட்டிலும் மக்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 23 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் 13 பேருக்கு பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தொற்றுக்கான தடுப்பு மருந்து போடப்பட்டதில் ஏற்பட்ட பக்க விளைவுகளால் அவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
உயிரிழந்த அனைவருமே பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை சமீபத்தில் போட்டுக் கொண்டவர்கள் ஆவர். இதுகுறித்து நார்வே நாட்டின் மருத்துவ ஏஜென்சி தலைமை மருத்துவர் Sigurd Hortemo என்பவர் “தடுப்பு மருந்தின் பக்க விளைவுகள் தான் 23 பேரின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்” என கூறியுள்ளார். உயிரிழந்த அனைவரும் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.