தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பப்லு பிரித்விராஜ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் தற்போது சன் டிவியில் பெரும்பாலான சீரியல்களிலும் அனைத்து வருகிறார்.இவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இந்த வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் என்று கூறி ஒரு இளம் பெண்ணை மேடையில் ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து பிரித்விராஜ் 23 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் மலேசிய பொண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு வைரலாச்சு. நான் பண்ண போறேன். ஆனா இப்போ இல்ல. உங்க கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் பண்ணுவேன். திருட்டுத்தனமாக எதையும் செய்ய மாட்டேன் என அவர் பேசியுள்ளார்.