கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. அந்தத் திரைப்படத்தில் படையப்பா கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அசத்தி இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான்.படையப்பா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்திலும் நீலாம்பரி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி கொடுத்திருப்பார்.
இந்த திரைப்படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் ஒன்றாக இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்து ரம்யா கிருஷ்ணன் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கியது. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஒன்றாக இணைந்து படம் நடிக்க உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன.