Categories
தேசிய செய்திகள்

“23 பவுன் நெக்லஸ்”… சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு… பெங்களூரு பக்தர் காணிக்கை..!!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 23 பவுன் தங்க நெக்லஸ் பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற காணிக்கை செலுத்துவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பப்பு என்ற தொழிலதிபர் நேற்று சபரிமலை ஐயப்பனுக்கு 23 பவுன் தங்க நெக்லசை காணிக்கையாக செலுத்தினார். அப்போது கோவில் தந்திரி கண்டரரு ராஜீ, மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி, துணைச் செயலர் கோபகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |