Categories
சினிமா தமிழ் சினிமா

23 வயது இளம்பெண்ணை மனம் முடித்த “கண்ணான கண்ணே நடிகர்”….? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!

நடிகர் பப்லு பிரித்விராஜ் தற்போது  இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

57 வயதான பப்லு பிரித்விராஜ் சினிமா மற்றும் சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர்.  இவர் வாரணம் ஆயிரம், பயணம், பாண்டிய நாட்டு தங்கம், சிகரம்,  மற்றும் அழகன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கின்றார். இவருக்கு பீனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

இவருடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இதனால் பப்லு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதே சமயம் தனது மகனையும் நன்றாக கவனித்து வந்தார். இது தொடர்பாக அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மலேசியாவில் பப்லு தொழில் தொடங்க அந்தப் பெண் சில உதவிகளைச் செய்தாராம். இப்போதும் மலேசியாவில் பப்லுவுக்கு சில பிசினஸ் போய்க் கொண்டிருக்கின்றது, அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அந்தப் பெண் தான். இங்கு சில மாதங்களுக்கு முன்னாடிதான் இவங்களுக்கிடையில் திருமணம் நடந்ததா தெரிய வருது என்கிறார்கள் பப்லுவுக்கு ரொம்பவே நெருக்கமான இன்னும் சிலர். இதனை தொடர்ந்து முதல் மனைவியைப் பிரிந்து விட்ட நிலையிலும் தன்னுடைய மகனுக்குத் தேவையான விஷயங்களை இப்போதும் பப்லுதான் செய்து வருகிறாராம்.

Categories

Tech |