Categories
மாநில செய்திகள்

“கூட்டு பலாத்காரம்” 23வயது இளம்பெண்னை தீ வைத்து எரித்த கொடூர கும்பல் கைது……!!

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் தனது சொந்த கிராமத்தில் சில பேரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட 23 வயது இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டு இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தூக்கிச் சென்று அவருக்கு தீ வைத்தது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீ வைப்பதற்கு முன்னர் அந்த கும்பல் அவரை மீண்டும் ஒரு முறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முந்தைய வழக்கில் கைதான 2 பேர் உட்பட 3 பேரை காவல்துறையினர் தற்போதுகைது செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |