மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இளைஞர் அரசியல் கட்சி தலைவர் முனிஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல நாட்களாக தமிழகத்தில் கனவு கண்ட இளைஞர்களுக்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம்.2020தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதியிலும் இளைஞர்களை மையப்படுத்தி, தனித்து போட்டியிடுவதற்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை முன் நிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்வோம். அனைத்து அரசியல் கட்சியும் சாதிக்கும், மதத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு கொடுப்பதில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். அரியர் மாணவர்களுக்காக கிட்டத்தட்ட ஏழு, எட்டு போராட்டங்கள் பண்ணிருக்கோம். கிட்டத்தட்ட அரியர் வழக்கில் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க, அந்த 23 லட்சம் மாணவர்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்காங்க.
மாணவர்கள் முதல்வருக்கு ஆதரவுன்னு யாரு சொன்னா ? எந்த மாணவர்களும் சொல்லலையே… ஏன்னா அவரு அறிவிச்சதோட நிக்கிதே தவிர… எல்லா மாணவர்களும் ஆன்லைனில் தேர்வு எழுதி முடிச்சிட்டாங்க. பிறகு எப்படி ”ஆல் பாஸ்” முதல்வர் பட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க முடியும் ? அந்த பட்டதையே நாங்க திரும்ப பெற்று விட்டோம் என சுவரொட்டி ஒட்டினோம். அதனால மாணவர்கள் ஆதரவு, இளைஞர்களின் ஆதரவு எங்களுக்கு தான் இருக்கு. அரியர் மாணவர்கள் மட்டுமன்றி, பல மாணவர்கள் நடைபெறும் மாணவர் பிரச்சனையை நாங்கள் கையில் எடுப்பதால் ஒட்டுமொத்த இளைஞர்களுடைய ஆதரவு எங்களுக்கு இருக்கு, அதன் காரணமாக தான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுறோம்.