Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 233ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க நகரில் -210, ராயபுரம் – 199, தேனாம்பேட்டை – 105, தண்டையார் பேட்டை – 77, கோடம்பாக்கம் – 97, அண்ணா நகர் – 86 என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக 202 பகுதிகள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மாநகராட்சியில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் ஆகிய 3 மண்டலங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அதிக பாதிப்பு உள்ள இந்த 3 மண்டலங்களில் கண்காணிப்புக்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |