Categories
உலக செய்திகள்

வேகமாக பரவும் கொரோனா… இத்தாலியில் பலி எண்ணிக்கை 233 ஆக உயர்வு..!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு இத்தாலியில்  233 பேர் இறந்துள்ளனர் என்றும் 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Image result for 233 people died in Italy for coronavirus.

இத்தாலியில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக நிகழ்ந்து வருவதால், லோம்பர்டு பிராந்தியம் மற்றும் 14 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த அந்நாட்டு  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், இத்தாலி நாட்டின் முழுவதும் சினிமா தியேட்டர், நாடக அரங்கம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றை மறு அறிவிப்பு வரும்வரை மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

Image result for 233 people died in Italy for coronavirus.

இத்தாலியில் தற்போது  233 பேர் கொரோனா வைரஸால் பலியானதுடன், 5,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 462ல் இருந்து 567 ஆக அதிகரித்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலி பிரதமர் கியூசெப் கான்டே (Giuseppe Conte) இந்த கொரோனா வைரஸ் பணக்காரர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடக்குப் பகுதியில் இருந்து, ஏழைகள் அதிகமாக வாழும் தெற்குப்பகுதிக்கு பரவுகிறதா என தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Image result for 233 people died in Italy for coronavirus.

இத்தாலியில் உள்ள 22 மண்டலங்களில் கொரோனா  பாதிப்பு இருக்கிறது. ரோம் நகரை உள்ளடக்கிய லாஜியா பகுதி , பாரி நகரை உள்ளடக்கிய புக்லியா பகுதி  ஆகியவற்றில் நேற்று தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

Categories

Tech |