Categories
அரசியல் மாநில செய்திகள்

234தொகுதியிலும் போட்டி…! 11ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்…. தெறிக்க விடும் இந்து மக்கள் கட்சி …!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், இந்துக்களின் குரல் சட்டமன்றத்திலேயே ஒலிக்க 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள், அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. விருப்ப மனுவை மாவட்ட தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரடியாக என்னிடத்திலும் தாக்கல் செய்து வருகிறார்கள். இதுவரை 180 தொகுதிக்கு சுமார் 213 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

வருகின்ற 10ஆம் தேதிக்குள்ளே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு,  எல்லா இடங்களிலும் மாவட்ட வாரியாக நேர்காணலும் நடத்தப்படும். 11ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல்கள் அறிவிக்கப்படும். தமிழகத்திலேயே 234 தொகுதிகளிலும் ஆன்மீகம் அரசியலை முன்னிறுத்தி…. ஹிந்து ஒற்றுமை…. ஹிந்து ஓட்டு வங்கி இதை உருவாக்கி விட வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை இந்து மக்கள் கட்சி செய்து வருகிறது.

இந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக – திமுக இந்த இரண்டும் நேரடியாக இரண்டு அணிகளாக மோதுகின்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதிமுகவோடு பாரதிய ஜனதா கட்சி சேர்ந்து இருக்கிறது. நாங்கள் அதிமுக – பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கின்றோம். இந்து மக்கள் கட்சியின் உடைய மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களிளே கூட்டணி தொடர்பான அதிகாரம், தேர்தல் சம்பந்தமான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் எனக்கு  வழங்கப்பட்டு இருக்கின்றது.

Categories

Tech |