Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி… சீமான் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்தல் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஓவைசி கட்சியுடன் மட்டுமல்ல எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் வேட்பாளரையே இறுதி செய்து விட்டோம். எனவே வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும். ரஜினியும் கமலும் இணைவதில் வியப்பில்லை. அவர்கள் இருவரும் நண்பர்கள், படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். அதனைப் போலவே ஒரு அரசியல் படம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |