தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்துப் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது மட்டும் தேர்தல் பிரசார பணிகளுக்கு தயாராவது போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக சட்டசபை தேர்தலுக்கான 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். விஜயகாந்த் தலைமையில் ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. அதில் ஆலோசனை செய்யப்பட்டு கூட்டணி பற்றி அறிவிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.