Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் மதிமுக பரந்து விரிந்து இருக்கிறது – மதிமுக

தமிழக தேர்தல் களம் முழு பரபரப்பில் இருந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணிகளை இறுதி செய்யும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விருப்பமனு, நேர்காணல் என பல கட்டங்களை கடந்து தற்போது கூட்டணி உடன்பாடு காண இறுதிகட்டத்தை பிரதான கட்சிகளான திமுக – அதிமுக எட்டியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் உடன்பாடு செய்து கொண்டது.

இதனிடையே திமுக சார்பாக தொகுதி உடன்பாடுக்கு மதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. திமுகவின் முடிவால் மதிமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக நிர்வாகிகள், மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்குவார்கள்  என்ற நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து இருக்கிறது.

நடைபெற இருக்கின்ற தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கும்மிடிப்பூண்டியில் இருந்து கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து இருக்கின்ற ஒரு இயக்கம், இந்த இயக்கத்திற்கான அங்கீகாரத்தை தாங்கள் என்ற வேண்டுகோளை நாங்கள் வைத்துள்ளோம். அந்த வேண்டுகோளை பரிசீலிப்பதாக திமுக சொல்லியுள்ளார்கள் என தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

Categories

Tech |