தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணியை தேமுதிக தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நியமித்துள்ளார். இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.