Categories
உலக செய்திகள்

“Google-க்கு இன்று 23-வது பிறந்த நாள்!”.. வெளியான கேக் வடிவ ஈர்ப்பு சித்திரம்..!!

கூகுள் நிறுவனம் தொடங்கி இன்றுடன் 23-வது வருடமாகும் நிலையில், அதனை கொண்டாடும் வகையில், கேக் வடிவம் கொண்ட டூடூளை வெளியிட்டிருக்கிறது.

கூகுள் நிறுவனமானது, கடந்த 1998-ஆம் வருடத்தில், தொடங்கப்பட்டது. இன்று தினந்தோறும் சுமார் 150 மொழிகளில் கோடிக்கணக்கானோர் கூகுளை பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்த லேரி பேஜ்-ம் செர்கே பிரினும் இணைந்து இணையதள தேடுதல் அரங்கை தோற்றுவித்தார்கள்.

தொடக்கத்தில், இதற்கு ‘பேக்ரப்’ என்று பெயரிட்டுள்ளார்கள். அதன் பின்பு கடந்த 1995 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று google.com என்ற வலைதளத்தை பதிவு செய்திருக்கிறார்கள். அதனையடுத்து கடந்த 1998-ஆம் வருடத்தில், செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி அன்று தான் நிறுவனமாக கூகுளை பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2015-ஆம் வருடத்திலிருந்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார்.

Categories

Tech |