Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள்….. 24 நோயாளிகள் கண்டுபிடிப்பு…. திண்டுக்கல் மருத்துவமனை நிர்வாகம் அதிரடி….!!

திண்டுக்கல்லில் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் காச நோயாளிகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோய்க்கான சிகிச்சை பிரிவு மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கே எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மூலம் காச நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா  பாதிப்பு இந்தியா முழுவதும் கோர தாண்டவமாடி வருவதால்,  அனைத்து மருத்துவ மனைகளும், கொரோனாவை கையாளுவதில் பிசியாக உள்ளன. அந்த வகையில்,

காசநோயாளிகளை  கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு, சிறிது நாட்கள் திண்டுக்கல்லில் அந்த பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் காசநோயாளிகள் கண்டுபிடிக்கும் விதமாக நடமாடும் எக்ஸ்ரே  வாகனங்கள் உலா வரத் தொடங்கியுள்ளன.  அதில்,

634 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட, 24 பேருக்கு காச நோய் தொற்று உறுதியாகிவிட்டது. மீதம் உள்ளவர்களின்  பரிசோதனை முடிவுக்காக  மருத்துவர்கள் காத்திருக்கின்றன. காச நோய்க்கான மருத்துவ சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மருத்துவமனை 1,638 காச நோயாளிகளை  கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |