இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 279 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 97 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 48 ஆயிரமாக உள்ளது. டெல்லியில் நேற்று ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.