Categories
மாநில செய்திகள்

24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்…. 41,695 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘ஏற்றுமதியில் ஏற்றம்’ என்ற வேலைவாய்ப்பு மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தலைமை செயலர் இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் மத்திய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தை வர்த்தக மற்றும் வணிகத்தின் உலக அளவில் முன்னணி மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் ஒன்றாக இணைந்து வர்த்தக மற்றும் வணிக வாரம் என்று நிகழ்ச்சியை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் பேசிய முதல்வர், ‘தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை’ மற்றும் ‘குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்’ நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு வெளியிட்டார்.

அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதற்காக பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்படி 24 தொழில் முதலீடுகளுக்கு ரூ.2210 கோடி மதிப்பில் ஒப்பந்தமிட்டு இதன் மூலம் 41,695 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |