Categories
மாநில செய்திகள்

24 மணிநேரத்திற்கு இடியுடன் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த24 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 10 முதல் 11 ஆம் தேதி வரை தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இதனைத் தவிர மற்ற மாவட்டங்கள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |