பிரான்சில் அலெக்ஸ் புயலில் சிக்கி 7 பேர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரான்ஸ் நாட்டினரை அலெக்ஸ் என்ற புயல் பாடாய்படுத்தி வருகிறது. அந்நாட்டின் நைஸ் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது 8 பேர் மாயமாகி உள்ளனர். 24 மணி நேரமாக 450 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது.
இதேபோன்று 2015-ம் வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கேன்ஸ் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் வசித்து வந்த 20 பேர் மரணமடைந்தனர். ஆனால் அப்போது பெய்த மழையை விட இப்போது பெய்த மழை மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.