சீரமைப்பு பணி காரணமாக இந்த இந்த இடங்களில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் நாளை தினம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அந்த மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 4ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி 9 மணி வரை தண்ணீர் வினியோகம் செய்யப் படாது என்று அந்த மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
அதாவது ஹர்தாஸ் நகரில் சாலைக்கு கீழே நடைபெறும் மெட்ரோ பணிகளை ஒட்டி வால்வுகள் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக, கோத்பந்தர் ரோடு, காந்தி நகர், கிசான் நகர், வாக்லே எஸ்டேட், எடர்நிட்டி மால் மற்றும் ஜான்சன் & ஜான்சன் பகுதிகளில் தண்ணீர் வசதி நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் சமதா நகர், இந்திரா நகர், கோத்தார காம்பவுண்ட், லோக்மான்ய நகர், ஸ்ரீ நகர், தானே ஜெயில், சாகெத், மும்ரா, கல்வா பகுதியை ஒட்டிய இடங்களிலும் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பொதுமக்கள் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், போதிய நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் தொடர்ந்து விநியோகிக்க ஏற்பாடு செய்யப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.