Categories
உலக செய்திகள்

24 மணி நேரத்தில் அதிகரித்த கொரோனா.. உச்சத்தை அடைந்த உயிரிழப்பு.. சுகாதார அமைச்சகம் அறிவிப்பு..!!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது, அமெரிக்காவின் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையை விட 2 மடங்கு அதிகமாகும். 

பிரேசிலில் கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் 90, 303 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த பாதிப்பு உலக நாடுகளிலேயே கொரோனா பாதிப்பின் உச்சத்தை அடைந்த அமெரிக்காவின் தற்போதுள்ள பாதிப்பு எண்ணிக்கையைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதனையடுத்து பிரேசிலின் சுகாதார அமைச்சகமானது, நாடு முழுவதிலும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 1,16,93,838 ஆக அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று கடந்த ஒரு நாளில் மட்டும் 2648 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2, 84, 725 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |