பிரிட்டனில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 915 நபர்கள் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன், தற்போது வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதனால் கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பால் 915 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் பிரிட்டனில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20,364 பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்படைந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வரை மொத்தமாக 38,092, 549 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 16.6 சதவீதமாக குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் படி பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.