இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்றால் இந்திய நாடு ஊரடங்கு பிறப்பித்தது, பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலை தான், இருந்தும் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு…. கொரோனா பாதிப்பு, உயிரிழப்பையும் கட்டுக்குள் வைத்திருப்பது மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது தெளிவாகிறது. இந்த நிலையில் இன்று காலை நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டது.
அதில் கடந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்து 565 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 66 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 460 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் 3 லட்சத்து 11 ஆயிரத்து 575 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.