Categories
சினிமா

24 மணி நேரத்தில் 6.3 மில்லியன் ட்விட்…. பிரபாஸ் பட ஃபர்ஸ்ட் லுக்… கொண்டாடும் படக்குழு…!!

ஃபர்ஸ்ட் லுக் வெளியான 24 மணி நேரத்திலேயே ஹாஸ்டேக்கில் 6.3 மில்லியனுக்கும் மேலான ட்விட்டுகள் போடப்பட்டுள்ளது என படக்குழுவினர் கொண்டாடுகின்றனர் 

பாகுபலி திரைப்படத்தின் மூலமாக பிரபலமான பிரபாஸ் அதனை தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான”சஹோ” திரைப்படத்தில் நடித்து பல்வேறு விமர்சனத்தை பெற்றுள்ளார். அதே சமயத்தில் சஹோ படத்தின் தயாரிப்பாளர் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இருவரும் சேர்ந்து தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்ற மொழியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்  மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட போகிறார்கள். ஜில் என்ற படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் ராதா கிருஷ்ணா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கப் போகிறார்.

இச்சமயத்தில் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் “ராதே ஷ்யாம்”என்ற தலைப்பு பெயரிடப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது வெளியான 24 மணி நேரத்திலேயே ஹாஸ்டேக்கில் 6.3 மில்லியனுக்கும் மேலான ட்விட்டுகள் போடப்பட்டுள்ளது என படக்குழுவினர் மிகவும் பெருமிதமாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |