தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும்.
நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய தகவல்களை திருடி அவர்களின் ஓடிபி, மெசேஜ்கள் போன்றவற்றை திருடும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக பண மோசடிகளும் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடைமுறை கொண்டு வருவதால் மோசடிகள் குறைக்கப்படும் என்று நம்பப்படுகிறது