விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன.
மேலும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு பிக்பாஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சதிஷ் சாரதி என்பவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு சதீஷ் சாரதி சச்சிதானந்தம் என்பவர்தான் பிக்பாஸின் குரலாக இருந்து அவரின் குரலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில், தற்போது அவர் தனது சம்பளத்தை முன்பைவிட, ஒரு லட்சம் ரூபாய் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருக்கு நாள் ஒன்றிற்கு 20,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரமும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அவருக்கு இந்த சம்பளம் ஓகே தானே!