Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

24 மணி நேரமும் விழிப்போடு கண்காணிங்க..! வாக்கு எண்ணும் மையத்தில்… டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு..!!

திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வாக்கு எண்ணும் மையத்தை திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரிக்கின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் மோப்பநாய் மூலம் வெடிகுண்டுகளை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

மேலும் 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினர் விழிப்பாக இருக்க வேண்டும். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தீவிரமாக பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.

Categories

Tech |