Categories
மாநில செய்திகள்

ஆண்டுதோறும் ரூ.24,000…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

சிறு, குறு நடுத்தர நிறுவன பணியாளருக்கு அதிகபட்சமாக ரூ.24,000 க்கு மிகாமல் மானியமாக அரசு வழங்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியம் ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூ 1.50 கோடியாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை தமிழக அரசே வழங்கும். ஆண்டுதோறும் ஒரு பணியாளருக்கு அதிகபட்சமாக ரூ.24,000 க்கு மிகாமல் மானியமாக அரசு வழங்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |