Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரம்… 9 குழந்தைகள்”பலி”… ராஜஸ்தான் மருத்துவமனையில் தொடரும் அவலம்..!!

ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் டிசம்பர் 10ஆம் தேதி 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடு இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்குத் தாய்ப்பால் நுரையீரலுக்கு சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து விட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் உயிரிழப்பு அதற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

அமைச்சர் டாக்டர் ராகுல் சர்மா தலைமையில் மருத்துவமனையில் 9 குழந்தைகள் இறந்த செய்தி கிடைத்ததும், அமைச்சர் டாக்டர் ரகு சர்மா உத்தரவிட்டுள்ளார். நான் மருத்துவக் கண்காணிப்பாளரிடம் பேசி அறிக்கை அளிக்கக் கோரினேன். குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தைக் கொடுத்துள்ளார்கள். எனினும் இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராகுல் சர்மா தெரிவித்தார். குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் ஜேகே லோன் மருத்துவமனையில் கடந்த மாதம் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |