Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில்….”2 கிலோமீட்டர் நெடுஞ்சாலை”… அதுவும் ஐஸ் கட்டிய வச்சு… இந்தியா 4 உலக சாதனை…!!

ஐஸ்சை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா உலக சாதனையை படைத்துள்ளது.

இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி இரண்டு கிலோமீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய சாதனையாக இந்த செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை குஜராத்தின் வதோதரா நகரை மும்பை மற்றும் டெல்லி உடன் நேரடியாக இணைக்கும் சாலை ஆகும்.

பிப்ரவரி 2 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று , 2 கி.மீ நீளமும் 18.75 மீட்டர் அகலமும் கொண்ட நெடுஞ்சாலை  24 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்காக, 1.10 லட்சம் மூட்டை சிமென்ட், 500 டன் பனியும் பயன்படுத்தப்பட்டன. இந்த சாதனை கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (Golden Book of World Records), மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (India Book of Records) என இரண்டு புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நான்கு சாதனை

முதலாவது சாதனை:  12 ஆயிரம் டன் சிமென்ட் கான்கிரீட் கலவையை உற்பத்தி செய்தது.
இரண்டாவது சாதனை: கலக்கப்பட்ட கான்கிரீட்டை மிக வேகமாக இடுவது.
மூன்றாவது சாதனை: ஒரு அடி தடிமன் மற்றும் 18.75 மீட்டர் அகலம் கொண்ட கட்டுமானம் செய்தது .

நான்காவது சாதனை: தரத்தில் எந்தவித சமரசமும் செய்துக் கொள்ளாமல் நடைபாதையை பராமரிப்பது .

இவை அனைத்தும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டதால், இந்த நான்கும் நான்கு உலக சாதனைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |