Categories
மாநில செய்திகள்

24 மணி நேர ராகிங் கண்காணிப்பு தடுப்பு பணி…. வேலூர் சிஎம்சி உறுதி…… ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் சிஎம்சி மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ‌ தாக்கல் செய்துள்ளது.

அதில் கல்லூரியில் ராகிங்கை தடுப்பதற்கு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எனவும், சிசிடிவி கேமராக்களை பொருத்தி கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு விடுதி வார்டன் மீது விசாரணை நடந்து வருவதாகவும், முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்களுடைய குறைகளை சொல்லும் விதமாக தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |