கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழ்நிலையில்பால் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, மற்ற அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டும், மாநில, மாவட்ட எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இதனால் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆவின் பால் நேரடி விற்பனை நிலையத்திலும், பால் காலை முதல் இரவுவரை எந்தவித தட்டுப்பாடுமின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடைகளுக்கு வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.