Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 வாரம் சிறப்பு பயிற்சி….. 407 உபி காவலர்களுக்கு…… சென்னையில் சத்திய பிராமண விழா…!!

சென்னையை ஆவடி பகுதியில்  உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது.

சென்னையை  அடுத்த ஆவடி  பகுதியில் உள்ள  மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில்  டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. வீரர்கள் நிகழ்த்திய கொடி அணிவகுப்பு மரியாதையை  டிஜிபி பிரவீன் அவர்கள் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி ஏற்றுக்கொண்டார்.

Categories

Tech |