சிம்பிள் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. நான்கு நிறங்களில் வெளியாகியுள்ள சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு ரூ.1,947- க்கு துவங்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த வாகனத்தை 2.45 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம். 3.6 வினாடிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தை எட்ட கூடிய இந்த வாகனம் அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்:
- இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு எதிர்கால வடிவமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் மிட்-டிரைவ் மோட்டாரை அடிப்படையாகக் கொண்டது.
- இது 30 லிட்டர், 12 அங்குல சக்கரங்கள், 7 அங்குல தனிப்பயனாக்கக்கூடிய டிஜிட்டல் டாஷ்போர்டு, ஆன்-போர்டு நேவிகேஷன், ஜியோ-ஃபென்சிங், SOS செய்தி, ஆவண சேமிப்பு, டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ப்ளூடூத் இணைப்பு போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
சிம்பிள் ஒன் இ -ஸ்கூட்டர் – சிவப்பு, வெள்ளை, கருப்பு மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஏதர், ஹீரோ எலக்ட்ரிக், ஒகினாவா மற்றும் முக்கியமாக ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கு சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டர் போட்டியாக களமிறங்கியுள்ளது.