சென்னையில் 24 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்ட்டுள்ளதை பொது சுகாதாரத் துறை உறுதி செய்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்திற்கு ஓமன், அயர்லாந்து, லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களை சோதனை செய்ததில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேரை பொது சுகாதாரத் துறையும், சென்னை மாநகராட்சியும் தனிமைப்படுத்தி உள்ளது. அதிலும் நோய் தொற்று உள்ள 46 பேர் சார்ந்த குடும்பங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
சென்னையில் பல்வேறு இடங்களில் தினம்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 24 ஆயிரம் பேரை மருத்துவ குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள். அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் தொலைவில் கிருமிநாசினி தொழிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 மருத்துவமனை, 3 தாய்-சேய் மருத்துவமனை என 18 மருத்துவமனையையும் தயார் படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கிட்டதட்ட 300 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், வெண்டிலேட்டருடன் தயணப்படுத்தப்பட்டுள்ளது.