தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு கல்வி இயக்குனர் கடிதம் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் Ist ஷிப்டில் பாடம் எடுக்க, 2,423 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் 11 மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Categories