நாடு முழுவதும் என்.ஐ.ஏ மீண்டும் நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நாடு முழுவதும் என்.ஐ.ஏ தொடர்ந்து தனது சோதனையை தீவிரப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் என பதற்றமான சூழல் நிலவினாலும், நேற்று என்.ஐ.ஏ உடைய சோதனை முற்றிலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ என்று சொல்லக்கூடிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 247 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
டெல்லியில் 30 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், அசாம் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் முன்னெச்சரிக்கையாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மத்திய பிரதேசத்தில் 21 பேரும், அசாமில் 25 பேரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
கடந்த வாரத்தில் தமிழகத்தில் நடந்த இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, தொடர்ந்து பதற்றமான சூழல்
நிலவி வந்தது. தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறார்கள். நாடு முழுவதும் இந்த சோதனைக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்திருந்தாலும் கூட நாடு முழுவதும் NIA சோதனை தீவிர படுத்தபட்டுள்ளது என்பதை இந்த கைது நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துள்ளது.
மேலும் இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக SDPI, PFI அமைப்பை இந்தியாவில் தடை செய்யலாம் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.