Categories
மாநில செய்திகள்

248 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல்…. சிங்கப்பூரிலிருந்து சென்னை வருகை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். 18+ வயது முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசி போதிய அளவில் இல்லை. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்துவதற்கு தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லாததால் தமிழக  அரசே  இறக்குமதி செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக 248 ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காலி சிலிண்டர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் இன்று சென்னை வந்துள்ளது.

Categories

Tech |