Categories
தேசிய செய்திகள்

24 ஆம் தேதி உருவாகும் யாஸ் புயல்… தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை…!!

வடக்கு அந்தமான் மற்றும் கிழக்கு வடக்கு கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் வரும் 24ஆம் தேதி இது புயலாக வலுப்பெற்று 26ஆம் தேதிகளில் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது உருவாகியுள்ள புயல் தீவிர, அதி தீவிர புயலாக வலுப்பெறும் வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு யாஷ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு எதுவும் இல்லை மாறாக வெப்பநிலையை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பலத்த காற்றுடன் பருவமழை தொடங்கும் எனவும், கேரளா, கர்நாடகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |