அமெரிக்க நாட்டில் ஜீன் கரோல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை கற்பழி த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தி உள்ளார். இதனைஅடுத்து அந்தப் பெண் தன் குற்றச்சாட்டில் கூறியதாவது “1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள உடைமாற்றும் அறையில் வைத்து அவர் தன்னைக் கற்பழித்துள்ளார்” என கூறியிருக்கிறார். ஆனால் ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை திட்டவட்டமாக மறுத்து மறுத்துள்ளார். ஆனாலும் விடாமல் அந்தப் பெண் ட்ரம்ப் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து அந்தப் பெண்ணின் வக்கீல் கூறியதாவது “முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த வாக்குமூலம் பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. டிரம்ப் மீதான இந்த வழக்கில் பிப்ரவரி ஆறாம் தேதி சிவில் கோட்டில் விசாரணை நடத்தப்படும்” என அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கில் ட்ரம்ப்க்கு ஆதரவான வக்கீலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த விசாரணை காணொளி காட்சி மூலமாக நடத்தப்பட்டதா? அல்லது நேரடியாக நடத்தப்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.