25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
திருப்பூர் மாநகர காவல் அதிகாரிகள் காவல்துறை 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதன்படி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்து போலீஸ் நிலையம்-பழனிச்சாமி கே.வி.ஆர்.நகர் , நல்லூர் போலீஸ் நிலையம்- டி.பழனிச்சாமி, வீரபாண்டி போலீஸ் நிலையம்- ராஜேஷ்குமார்.
சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்களான வீரபாண்டி போலீஸ் நிலையம்- சையது இக்பால், திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையம்- காசிமாயன் உள்ளிட்டோருக்கு பணத்தை வெகுமதியாக தந்து சான்றிதழ் வழங்கி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டுக்களை அவர்களுக்கு தெரிவித்தார்.