25 இடங்களில் கைவரிசை காட்டிய திருடன், திருடும் முன் சூடம் ஏற்றி , சாமி கும்பிட்டு தொடங்குவேன் என்று போலீசார் விசாரணையில் வாக்குமூலம் அளித்தான் .
தேனி மாவட்டம் வெங்கலா நகரை சேர்ந்த 44 வயதான பொன்ராஜ். இவர் தமிழகம் முழுவதுமாக சுமார் 25 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை ,பணம் போன்ற பொருட்களை திருடி வந்துள்ளார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ,இவர் கோவை மாவட்ட போலீசாரிடம் சிக்கியுள்ளார். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை போலீசார் அவரை கைது செய்து ,கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கு முன் கைதான பொன்ராஜ் இடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கைதான பொன்ராஜ் கூறுகையில்:-
நான் தேனி மாவட்டம் அல்லி நகருக்கு அடுத்துள்ள வெங்கலா நகர்ப்பகுதியில் 2 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தேன். இந்த திருட்டு தொழிலில் நான் 12 ஆண்டு காலமாக செய்து வந்தேன். நான் திருடப் போகும் முன் யாரிடமும் மாற்றிக் கொள்ளக்கூடாது என்று, வீட்டிலுள்ள பூஜை அறையில் கற்பூரம் ஏற்றி, சாமி கும்பிட்டு தான் வெளியேறுவேன். வாரத்தில் உள்ள 7 நாட்களில் 3 நாட்கள் மட்டும் தான் திருட்டு தொழில் செய்வேன்.
என் ஊரிலிருந்து பேருந்து மூலமாக தான் மற்ற ஊர்களுக்கு செல்வேன். நான் திருட வேண்டிய ஊர் வந்தவுடன் அவ்வூரிலுள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி விடுவேன். திருடப் போகும் ஊரிலுள்ள கிராமங்கள் மற்றும் தெருக்களில் வழிப்போக்கன் போல நடந்து சென்று திருடப் போகும் வீட்டை இரண்டு, மூன்று முறை நோட்டம் காண்பேன்.
இதைத்தொடர்ந்து விடியற்காலையில் வீட்டின் பூட்டை உடைக்க, தேங்காய் மட்டையை உறிக்க பயன்படும் கூர்மையான கம்பியை பயன்படுத்துவேன். இந்த கம்பி மூலம் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று நகை பணத்தை திருடி விட்டு யாருக்கும் சந்தேகம் படாமல் தப்பிச் சென்று விடுவேன். இவ்வாறு திருடிய பொருட்களை என் உறவினர்களிடம் பத்திரமாக வைக்குமாறு கொடுத்துவிடுவேன் .இவ்வாறாக திருடன் தனது வாக்குமூலத்தை போலீசாரிடம் கூறினான்.